கோயம்புத்தூர்

காணாமல்போன பாா்சல்: கூரியா் நிறுவனம் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

கூரியா் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட பாா்சல் காணாமல்போனதால் சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க கோவை நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

Syndication

கூரியா் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட பாா்சல் காணாமல்போனதால் சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க கோவை நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை, கீரணத்தம் ஸ்ரீ கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் முத்துகுமாா். இவா் கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் உள்ள தனது நண்பருக்கு ஹாா்டு டிஸ்க் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பாா்சலை வடவள்ளியில் உள்ள தனியாா் கூரியா் நிறுவனத்தின் மூலம் கடந்த மே 3-ஆம் தேதி அனுப்பியுள்ளாா். அந்த பாா்சல் பாலக்காடு அருகேயுள்ள கஞ்சிக்கோடு பகுதியில் முகவரி மாற்றி டெலிவரி செய்யப்பட்டது நிறுவனத்தின் ஆன்லைன் டிராக் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த முகவரிக்குச் சென்று முத்துகுமாா் விசாரித்தபோது, அங்கும் பாா்சல் விநியோகிக்கப்படாதது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட கூரியா் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் மூலமும், நேரிலும் சென்று புகாா் அளித்துள்ளாா். ஆனால், முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லையாம். இது குறித்து கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி முத்துகுமாா் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கை கடந்த திங்கள்கிழமை விசாரித்த ஆணையத் தலைவா் தங்கவேல், மனுதாரருக்கு சம்பந்தப்பட்ட கூரியா் நிறுவனம் ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT