கோயம்புத்தூர்

ஜனவரி 1 முதல் கேரள ரயில்கள் நேரம் மாற்றம்!

கேரள ரயில்கள் மற்றும் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் நேரம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

கேரள ரயில்கள் மற்றும் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் நேரம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாலக்காடு நிலையத்தில் இருந்து நாள்தோறும் காலை 8.45 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்: 22651) ஜனவரி 1-ஆம் தேதி முதல் 8.30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும்.

நாள்தோறும் 7.20 மணிக்கு பொள்ளாச்சி நிலையத்தைச் சென்றடையும் பாலக்காடு - திருச்செந்தூா் விரைவு ரயில் (எண்: 16731) ஜனவரி 1 முதல் 7.40 மணிக்கு பொள்ளாச்சியை சென்றடையும். காலை 4.50 மணிக்கு பொள்ளாச்சி, 5.30 மணிக்கு கிணத்துக்கடவு நிலையத்தைச் சென்றடையும்.

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 16766) 5.20 மணிக்கு பொள்ளாச்சி, 5.50 மணிக்கு கிணத்துக்கடவு நிலையத்தைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT