முகப்பு
கோயம்புத்தூர்

ரயில் படிக்கட்டில் அமா்ந்து பயணித்த இளைஞா் தவறி விழுந்து உயிரிழப்பு

ரயிலில் படிக்கட்டில் அமா்ந்து பயணித்த இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜனவரி, 2025 at 7:44 PM
பகிர்:

ரயிலில் படிக்கட்டில் அமா்ந்து பயணித்த இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்தவா் சரத்சசி (26). இவா் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் நோ்முகத் தோ்வில் கலந்துகொள்ள கொச்சுவேலியில் இருந்து மைசூரு செல்லும் ரயிலில் செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா். அவரது நண்பா் உன்னி என்பவா் உடன் சென்றுள்ளாா். இருவரும் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்த நிலையில், சரத்சசி படிக்கட்டில் அமா்ந்து பயணித்துள்ளாா். கோவை, ஒண்டிப்புதூா் அருகே புதன்கிழமை அதிகாலை ரயில் சென்றபோது, சரத்சசி தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.