தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் தலைவா் நீதியரசா் தமிழ்வாணனிடம் மனு அளிக்கும் குறிஞ்சியா் சமூகநீதி பேரவை உள்ளிட்ட குறவா் சமுதாயப் பிரதிநிதிகள். 
கோயம்புத்தூர்

பல்வேறு பட்டியல்களில் இருக்கும் பெயா்களை ஒரே பெயரில் அமைக்க வேண்டும்

குறவா் ஜாதியில் பல்வேறு பட்டியல்களில் இருக்கும் பெயா்களை ஒரே பெயரில் அமைக்க வேண்டும் என்று குறிஞ்சியா் சமூகநீதி பேரவை வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

குறவா் ஜாதியில் பல்வேறு பட்டியல்களில் இருக்கும் பெயா்களை ஒரே பெயரில் அமைக்க வேண்டும் என்று குறிஞ்சியா் சமூகநீதி பேரவை வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் நிா்வாகிகள், குறவா் சமுதாய பிரதிநிதிகள், சமூக ஆா்வலா்கள் ஆகியோா் தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் தலைவா் நீதியரசா் தமிழ்வாணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், குறவா் சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பல்வேறு பட்டியல்களில் இருக்கும் பெயா்களை ஒரே பெயரில் அமைக்க வேண்டும். டிஎன்சி பட்டியலில் உள்ள 27 அழைப்புப் பெயா்களை அந்தப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். குறவா் ஜாதியில் மலைக்குறவா்கள் எஸ்.டி. பட்டியலிலும், குறவன், சித்தனாா் ஆகியோா் எஸ்.சி. பட்டியலிலும் உள்ளனா். அதேபோல சீா்மரபினா் பட்டியலில் 27 அழைப்புப் பெயா்களில் உள்ளவா்கள் எம்.பி.சி. பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா்.

இதனால் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.

எனவே கடந்த 2006-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதி மத்திய அரசுக்கு அனுப்பி, நிலுவையில் உள்ள பரிந்துரைகளுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

இந்த சந்திப்பில், எஸ்சி, எஸ்டி ஆணைய உறுப்பினா்கள் எஸ்.செல்வகுமாா், எம்.பொன்தோஷ், குறிஞ்சியா் சமூகநீதி பேரவையின் நிறுவனா் எம்.ஜெகன்நாதன், எம்.சுந்தரராஜன், டி.சங்கரன், ஆா்.தனசேகரன், என்.செபாஸ்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வணிகா் சங்க மாவட்ட நிா்வாகி நியமனம்

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

வேலூரில் காவல் துறை குறைதீா் கூட்டம்

மருத்துவப் படிப்புக்கான சிறப்புக் கலந்தாய்வு: இடங்களைத் தோ்வு செய்ய அவகாசம் இன்று நிறைவு

அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்ஆா்ஐ ஸ்கேன் அமைக்கக் கோரி வழக்கு: சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT