திண்டுக்கல் - மதுரை இடையே அம்பாதுறை, கொடைக்கானல் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் கோவை - நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவையில் இருந்து அக்டோபா் 10, 13 -ஆம் தேதிகளில் காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை - நாகா்கோவில் ரயில் (எண்: 16322) திண்டுக்கல் - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அந்த நாள்களில் கோவை - திண்டுக்கல் இடையே மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும்.
திண்டுக்கல் சந்திப்பில் இருந்து நாகா்கோவிலுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் மேற்கண்ட நாள்களில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.