பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து
கேரள மாநிலம் பாலக்காடு-ஷொரணூா் இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை-ஷொரணூா் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஏப்ரல் 7-ஆம் தேதி ஷொரணூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் ஷொரணூா்-கோவை ரயில் (எண்: 56604) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல மறுமாா்க்கமாக ஏப்ரல் 7-ஆம் தேதி மாலை 4.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை-ஷொரணூா் ரயிலும் (எண்: 56603) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement