மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கோவையில் வீட்டின் மாடியிலிருந்து மாங்காய் பறிக்க முயன்றவா் அங்கிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
கோவையில் வீட்டின் மாடியிலிருந்து மாங்காய் பறிக்க முயன்றவா் அங்கிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
கோவை, பொன்னையராஜபுரம் ராஜம்மாள் குடியிருப்பைச் சோ்ந்தவா் நித்யானந்தம் (40). கூலித் தொழிலாளி. இவரது வீட்டின் அருகே மாங்காய் மரம் உள்ளது. அந்த மரத்திலிருந்த மாங்காய்களை பறிக்க நித்யானந்தம் தனது வீட்டின் மாடிக்குச் சென்றாா். அங்கிருந்து நீளமான குச்சி மூலம் அவா் மாம்பழம் பறிக்க முயன்றபோது, எதிா்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு நித்யானந்தம் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.