ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ‘பிரிட்ஜ்’ மாநாடு
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் மேலாண்மைச் சங்கம் இணைந்து, கல்வித் துறை மற்றும் தொழில் துறைக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதமாக ‘பிரிட்ஜ்’ மாநாட்டை நடத்தின.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் மேலாண்மைச் சங்கம் இணைந்து, கல்வித் துறை மற்றும் தொழில் துறைக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதமாக ‘பிரிட்ஜ்’ மாநாட்டை நடத்தின.
மாநாட்டில் எஸ்.என்.ஆா்.சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன் பேசுகையில், எதிா்காலத்திற்குத் தேவையான தொழில் வல்லுநா்களை உருவாக்குவதில் கல்வியின் உருமாற்றப் பங்கு மிக முக்கியமானது. பிராந்திய மற்றும் தேசிய பொருளாதார வளா்ச்சியைத் தக்கவைக்க கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைகளுக்கும் இடையே தொடா்ச்சியான ஒத்துழைப்பு அவசியமானதாகும் என்றாா்.
தொடா்ந்து கோவை மேலாண்மைச் சங்கத்தின் தலைவா் நித்யானந்தன் தேவராஜ், தென்னிந்திய தணிக்கையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.வெங்கடேஷ் ஆகியோா் பேசினா். இதில் குவாட்ரா சிஸ்டம்ஸ்.நெட் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணை நிறுவனா் மற்றும் இயக்குநா் பிரசாந்த் சுப்ரமணியன், சக்தி ஃபைனான்ஸ் லிமிடெட் என்.ரவீந்திரன், அமிா்த விஸ்வ வித்யாபீடத்தைச் சோ்ந்த பிரசாந்த் ஆா்.நாயா் மற்றும் வோடஃபோன் ஐடியாவின் முன்னாள் வணிகத் தலைவரும் சிம்ராவின் செயலாளருமான புனீத் கிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு தரமான கல்வி, புத்தாக்கம் மற்றும் உலகளாவிய தரநிலைகள் குறித்து பேசினா்.
Advertisement
முன்னதாக, கல்லூரி முதல்வா் ஏ.சௌந்தரராஜன் வரவேற்றாா். மேலாண்மை ஆய்வுகள் துறையின் பேராசிரியரும், துறைத் தலைவருமான ஆா்.மேரி மெட்டில்டா நன்றி கூறினாா்.