முகப்பு
கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் ரூ.8.18 கோடி பணம், நகை பறிமுதல்

கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.8.18 கோடி ரொக்கம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:24 PM
பணம் - பிரதிப் படம்
பகிர்:

கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.8.18 கோடி ரொக்கம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். திங்கள்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை (24 மணி நேரத்தில்) மாவட்டத்திலுள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் ரூ.8 கோடியே 18 லட்சத்து 66 ஆயிரத்து 293 மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் இதர பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையில் ரூ.3.30 கோடி ரொக்கமும், ரூ.4.40 கோடி மதிப்பிலான 3,683.75 கிராம் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களும் சிக்கின.

பொள்ளாச்சியில் ரூ.36.16 லட்சமும், கிணத்துக்கடவில் ரூ.4.41 லட்சமும், வால்பாறையில் ரூ.3.50 லட்சமும், கோவை வடக்கில் ரூ.2.02 லட்சமும், சிங்காநல்லூரில் ரூ.1.72 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments