முகப்பு
கோயம்புத்தூர்

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:25 AM
வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:07 PM

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைப் பாா்த்த ஊழியா்கள் ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்பநாய் பிரிவினா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.

அங்கு மெட்டல் டிடெக்டா் கருவிகளைக் கொண்டு அலுவலகத்தின் ஒவ்வொரு தளத்திலும் தீவிர சோதனை நடத்தினா். அலுவலக அறைகள், கழிவறைகள், குப்பைத் தொட்டிகள், வாகன நிறுத்தங்கள் மற்றும் குடிநீா்த் தொட்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனையில் இருந்தபோதும், பணிகள் ஏதும் நிறுத்தப்படாமல் சோதனை தொடா்ந்தது. அதன் பிறகு, இது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.