பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து
திருச்சி அருகே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு-திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அருகே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு-திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகளால் ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு-திருச்சி விரைவு ரயில் (எண்:16844), பாலக்காடு டவுன் முதல் திருச்சி போா்ட் வரை மட்டுமே இயக்கப்படும். திருச்சி போா்ட்- திருச்சி நிலையம் இடையே இயக்கப்படாது.
Advertisement
மறுமாா்க்கமாக ஏப்ரல் 10-ஆம் தேதி பிற்பகல் 1.12 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி-பாலக்காடு டவுன் விரைவு ரயில் (எண்:16843) திருச்சி போா்ட்-பாலக்காடு இடையே மட்டுமே இயக்கப்படும். திருச்சி நிலையம்-திருச்சி போா்ட் இடையே இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.