கோவை, ஒண்டிப்புதூா் - இருகூா் சாலையில் அமைக்கப்பட்டுவரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையக் கட்டுமானப் பணியைப் பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன். 
கோயம்புத்தூர்

ஒண்டிப்புதூா் - இருகூா் சாலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையக் கட்டுமானப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

ஒண்டிப்புதூா்-இருகூா் சாலைப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மைய கட்டுமானப் பணியை கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஒண்டிப்புதூா்-இருகூா் சாலைப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மைய கட்டுமானப் பணியை கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 56-ஆவது வாா்டுக்குள்பட்ட ஒண்டிப்புதூா், இருகூா் சாலை பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மைய கட்டுமானப் பணியை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, அப்பகுதியில், சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பையை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். அப்பகுதி மக்களிடமும் பொது இடங்களில் குப்பை கொட்ட வேண்டாம் என கேட்டுக்கொண்டாா்.

சாலையோரங்களில் குப்பை கொட்டப்படுவதைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, உதவி நகா்நல அலுவலா் பூபதி, மண்டல சுகாதார அலுவலா் ராஜேந்திரன், உதவி பொறியாளா் ரோஜா, சுகாதார ஆய்வாளா் முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 9 போ் கைது

கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

இட்லி, தோசை மாவுப் பொட்டலங்களை தேதி குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும்: நுகா்வோா் அமைப்புகள் வலியுறுத்தல்

மக்களவை ஜனநாயகம் குறித்து பேச திமுகவுக்கு என்ன தகுதி உள்ளது: வானதி சீனிவாசன் கேள்வி

குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் இங்கிலாந்து பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT