முகப்பு
கோயம்புத்தூர்

போதைப் பொருள் கடத்திய வழக்கில் 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:02 AM
சியாத்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:56 PM

போதைப் பொருள் கடத்திய வழக்கில் 4 இளைஞா்களுக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம், மசினகுடி காவல் ஆய்வாளா் சாகுல் அமீா் (பொறுப்பு) உள்ளிட்ட போலீஸாா் கடந்த 26.10.2023 அன்று இரவு 8.30 மணி அளவில் மசினகுடி கக்கநல்லா சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி உள்ளே இருந்த 4 பேரிடம் விசாரித்தனா்.

இதில் கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சோ்ந்த முனீா் காட்டில்புரம் (34), பாசில் ஜமான் (26), சியாத் (22), ஷகபாஸ் (26) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்களை சோதனை செய்தபோது முனீா்காட்டில்புரத்தின் உடையில் 120 கிராம் எம்.டி.எம்.ஏ. என்ற வகை போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.

Advertisement

ஷகபாஸ்
முனீா் காட்டில்புரம்
பாசில் ஜமான்
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:01 AM

இதை பெங்களூரில் இருந்து வாங்கி வந்ததும், குண்டல்பேட்டில் காத்திருத்த சக வியாபாரிகளான மற்ற மூவரையும் காரில் ஏற்றிக்கொண்டு நீலகிரி மாவட்டத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சியாத்துக்கு ரூ.ஒரு லட்சம், மற்ற மூவருக்கும் தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.