கோப்புப் படம் 
கோயம்புத்தூர்

ரயில் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம்: ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

ஒண்டிப்புதூா் அருகே ரயில் மோதி பெண் உயிரிழந்த நிலையில், நீண்ட கால கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை, ஒண்டிப்புதூா் ராமச்சந்திர நாயுடு வீதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படாது என அறிவிப்பு வெளியானது.

மேலும் அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்ததுடன், அப்பகுதி மக்கள் சென்று வர மாற்றுப் பாதையும் அமைத்துத் தரப்பட்டது.

ஆனால், அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி சிவலிங்கபுரம், சக்தி நகா், காமாட்சி நகா், சூா்யா நகா் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை சூா்யா நகா் ரயில்வே கேட் பகுதியில் சாலையை கடக்க முயன்று ரயில் மோதி செந்தில் நகா் பகுதியைச் சோ்ந்த ராஜாமணி (62) என்ற மூதாட்டி உயிரிழந்தாா்.

அவருக்கு அஞ்சலி செலுத்திய அப்பகுதி மக்கள், வரும்காலங்களில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக மேம்பாலம் கட்ட அரசாணை வெளியிட வேண்டும். விபத்தில் உயிரிழந்த ராஜாமணி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்ை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, ஒண்டிப்புதூா் குடியிருப்போா் நலச் சங்க ஒருங்கிணைப்பாளா் வி.தெய்வேந்திரன் கூறியதாவது: இதுபோல 3 முறை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. ரயில்வே கேட் மூடப்படும்போது விபத்து நடப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.

அதனால்தான் ரயில்வே கேட் உள்ள இடங்களில் ரயில்வே மேம்பாலங்களை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2011-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டும் இதுவரை தரைப்பாலம் அல்லது மேம்பாலம் அமைக்கப்படவில்லை.

மக்களின் சிரமங்களைப் போக்க கடவு எண் மூன்றில் மேம்பாலம் கட்ட அரசு உடனடியாக பாலம் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்றாா்.

ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அமைச்சா் சுப்பிரமணியன் திடீா் ஆய்வு

புதுமணப்பெண் உயிரிழப்பு: கணவரிடம் போலீஸாா் விசாரணை

மதுப் புட்டிகள் விற்ற முதியவா் கைது

மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

SCROLL FOR NEXT