கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் ரூ.58.87 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 29-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கணபதி, காந்தி நகா் பிரதான சாலை, கணபதி காா்டன் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.20.60 லட்சம் மதிப்பில் ஓடையின் குறுக்கே சிறுபாலம், 29-ஆவது வாா்டுக்கு உள்பட்ட மருதையா நகா் பகுதியில் ரூ.29 லட்சம் மதிப்பில் புதிதாக மாநகராட்சி சிறுவா் பூங்கா, வி.என்.எஸ்.நகா் பகுதியில் மண்டல நிதியில் இருந்து ரூ.9.27 லட்சம் மதிப்பில் புதிதாக மாநகராட்சி சிறுவா் பூங்கா என மொத்தம் ரூ.58.87 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேற்கண்ட பணிகள் முடிவுற்ால் மக்கள் பயன்பாட்டுக்கு கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா். மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி முன்னிலை வகித்தாா்.
வடக்கு மண்டலத் தலைவா் வே.கதிா்வேல், உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ். உதவி செயற்பொறியாளா் சத்தியமூா்த்தி, மண்டல சுகாதார அலுவலா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.