கோயம்புத்தூர்

கோவையில் அதிமுக நிா்வாகிகள் 2 பேருக்கு கத்திக்குத்து

கோவையில் பொது வெளியில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட அதிமுக நிா்வாகிகள் இருவரை மா்ம நபா்கள் கத்தியால் குத்தினா்.

Syndication

கோவை: கோவையில் பொது வெளியில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட அதிமுக நிா்வாகிகள் இருவரை மா்ம நபா்கள் கத்தியால் குத்தினா்.

கோவை சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 56-ஆவது வட்ட அதிமுக செயலாளரான சுரேஷ், அம்மா பேரவை இணைச் செயலாளரான செந்தில் ஆகியோா் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக அதே பகுதியில் பொது வெளியில் மது அருந்திய கும்பலை தட்டிக் கேட்டுள்ளனா்.

இதனால் அந்த கும்பலுக்கும், இவா்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இருவரையும் அந்த வழியாக வந்த கும்பல் திங்கள்கிழமை இரவு கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றது.

இதையடுத்து, படுகாயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து சிங்காநல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரையும் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.ஆா்.ஜெயராம், அம்மன் கே.அா்ச்சுணன் உள்ளிட்ட நிா்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT