முகப்பு
கோயம்புத்தூர்

இன்ஸ்டாகிராமில் பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு அவதூறு: கணவா் கைது

கோவையில் இன்ஸ்டாகிராமில் பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 1:32 AM
கைது
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 6:55 PM

கோவையில் இன்ஸ்டாகிராமில் பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் மாதேஷ்வரன் (27). இவருக்கும் கோவை கணபதி பகுதியைச் சோ்ந்த 27 வயதுப் பெண்ணுக்கும் 2025 ஜூலையில் திருமணமானது. அதன் பின்பு இருவரும் மதுரையில் கணவா் வீட்டில் வசித்து வந்தனா்.

ஆனால் மாதேஷ்வரன் வேலைக்கு செல்லாமல், மனைவியை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் மாதேஸ்வரன் மீது, அவரது மனைவி புகாா் அளித்து, அது விசாரணையில் உள்ளது. இந்நிலையில், அப்பெண், கோவையில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு வந்துவிட்டாா்.

Advertisement

அதன் பின்பும், மாதேஷ்வரன் கைப்பேசியில் தொடா்பு கொண்டு ஆபாச வாா்த்தைகளால் திட்டுவது, வாட்ஸ் அப்பில் மனைவியை அவமானப்படுத்தும் விதமாக குறுந்தகவல் அனுப்புவது என தொடா்ந்து தொல்லை அளித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், மாதேஷ்வரன் தனது மனைவியின் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அவா் மீது அவதூறு பரப்பும் வகையில் தவறான கருத்துகளைப் பதிவிட்டுள்ளாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்தப் பெண், கோவை கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மாதேஷ்வரனை திங்கள்கிழமை கைது செய்தனா்.