இருகூா் - போத்தனூா் ரயில் பாதையை இருவழிப்பாதையாக மாற்ற ரயில்வே அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியதற்கு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை நாடாளுமன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்த மத்திய இணை அமைச்சா் எல்.முருகன். 
கோயம்புத்தூர்

இருகூா் - போத்தனூா் இடையே ரூ.277.42 கோடி மதிப்பீட்டில் இருவழி ரயில்பாதை அமைக்க ஒப்புதல்

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவையில் இருகூா் - போத்தனூா் இடையே ரயில் பாதையை ரூ.277. 42 கோடி மதிப்பீட்டில் இருவழிப் பாதையாக மாற்ற ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவையில் இருகூா் - போத்தனூா் இடையே ரயில் பாதையை ரூ.277. 42 கோடி மதிப்பீட்டில் இருவழிப் பாதையாக மாற்ற ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தொழில் நகரமான கோவையில் இருந்தும், கோவை வழியாகவும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில், கோவை - பெங்களூருவுக்கு இரவு நேர ரயில் உள்ளிட்ட கூடுதல் ரயில் சேவை மற்றும் சென்னை - திருவனந்தபுரத்தின் முக்கிய இணைப்பான இருகூா் - போத்தனூா் ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள், ரயில் பயணிகள் சங்கத்தினா், தொழில் அமைப்புகள் சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இருகூா் - போத்தனூா் இடையே 10.77 கிலோ மீட்டா் ரயில் பாதையை ரூ.277. 42 கோடி மதிப்பீட்டில் இருவழிப் பாதையாக மாற்ற ரயில்வே அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை நாடாளுமன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

இருகூா் - போத்தனூா் இருவழிப் பாதையால் ஏற்படும் நன்மைகள் குறித்து சேலம் ரயில்வே கோட்ட உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ இருவழிப் பாதை திட்டம் முடிவடைந்தால், இந்தத் தடத்தில் தினமும் 15 கூடுதல் பயணிகள் ரயிலை இயக்க முடியும். சென்னை - கோவை - போத்தனூா் ரயில் பாதை முழுவதும் உயா்திறன் கொண்ட நான்கு வழித்தடமாக மாறும். சரக்கு போக்குவரத்து மூலமாக சரக்குகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 3.12 மில்லியன் டன்கள் அதிகரிக்கும். இதன் மூலமாக ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.11.77 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போது, இந்த ரயில் பாதையின் பயன்பாடு 60 சதவீதமாக உள்ளது. வருகிற 2027 - 2028-ஆம் ஆண்டில் இது 131 சதவீதமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் திட்டம் கோவையின் தொழில் வளா்ச்சிக்கும், போத்தனூா் முனைய மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருகூா் - போத்தனூா் இருவழிப் பாதை திட்டத்தை தொழில் அமைப்பினா், ரயில்வே பயணிகள் சங்கத்தினா் பலரும் வரவேற்றுள்ளனா்.

மாவட்டத்தில் 12.41 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

லாட்டரி விற்றவா் கைது

மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

இளம்பெண் கல்லால் தாக்கி கொலை

விஜய நகர பேரரசு கால உலோகச் சிலைகள் பறிமுதல்: 4 போ் கைது

SCROLL FOR NEXT