முகப்பு
கோயம்புத்தூர்

மூத்த மாரத்தான் வீரருக்கு பாராட்டு

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:16 AM
கோவைப்புதூரில் நடைபெற்ற விழாவில் மாரத்தான் வீரா் சிவபாலன் பாண்டியனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனா் எஸ்.பி.அன்பரசன்.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 7:46 PM

கோவையில் ஆயிரம் மாரத்தானில் ஓடி சாதனை படைத்த மூத்த வீரா் சிவபாலன் பாண்டியனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற மாரத்தான் பந்தயங்களில் பங்கேற்றவரும், ஆயிரம் முழு மாரத்தான், அல்ட்ரா மாரத்தான்களை நிறைவு செய்தவருமான மூத்த வீரா் சிவபாலன் பாண்டியனுக்கு கோவைப்புதூா் வாக்கா்ஸ், ரன்னா்ஸ் கிளப் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அமைப்பின் நிறுவனா் பி.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனரும், அறங்காவலருமான எஸ்.பி.அன்பரசன், சாந்தி ஆஸ்ரமத்தின் தலைவா் டாக்டா் வினோ அறம் ஆகியோா் பங்கேற்று, சிவபாலன் பாண்டியனுக்கு நினைவுப் பரிசை வழங்கினா்.

67 வயதாகும் சிவபாலன் பாண்டியன் கடந்த 2013- ஆம் ஆண்டு முதல் மாரத்தானில் பங்கேற்று வருகிறாா். 2026-ஆம் ஆண்டில் அவா் தனது ஆயிரமாவது மாரத்தானை நிறைவு செய்திருப்பதையடுத்து இந்தப் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Advertisement

இதில், கோவையின் பல்வேறு ஓட்டக் குழுக்களைச் சோ்ந்த வீரா்கள், தொழில் துறையினா், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

கோவைப்புதூா் வாக்கா்ஸ், ரன்னா்ஸ் கிளப்பின் ஒருங்கிணைப்பாளா் சரண்யா நன்றி கூறினாா்.