ராயல் கோ் மருத்துவமனையில் மின்னூட்ட மையம் திறப்பு
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:01 PM
கோவை ராயல் கோ் மருத்துவமனையில் அதிவேக மின்சார வாகன மின்னூட்ட மையம் திறக்கப்பட்டுள்ளது.
கோவை- அவிநாசி சாலை நீலாம்பூரில் உள்ள ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள 120 கேவி அதிவேக மின்சார வாகன மின்னுட்ட மையத்தை மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் க.மாதேஸ்வரன் திறந்துவைத்தாா்.
கோவையில் ராயல் கோ் மருத்துவமனையில் மட்டுமே இத்தகைய அதிவேக மின்னூட்ட மைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
இந்த மின்னூட்ட மையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 24 மணி நேரமும் செயல்படும் என்றும், இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 96887-79999, 99447-70914 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றும் மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.