முகப்பு
கோயம்புத்தூர்

மாநகரில் ரூ5.60 கோடி மதிப்பில் முடிவுற்ற வளா்ச்சிப் பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் ரூ5.60 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற வளா்ச்சிப் பணிகளை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:38 AM
பீளமேட்டில் நகா்ப்புற வீடற்ற ஆதரவற்றோா் தங்கும் விடுதியை திறந்துவைத்த கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உடன், மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 7:11 PM

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் ரூ5.60 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற வளா்ச்சிப் பணிகளை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 26-ஆவது வாா்டுக்கு உள்பட்ட விளாங்குறிச்சி சாலை பீளமேடு பகுதியில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்க நிதியின் கீழ் ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகா்ப்புற வீடற்ற ஆதரவற்றோா் தங்கும் விடுதி, கிழக்கு மண்டலம், 53-ஆவது வாா்டுக்கு உள்பட்ட மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் வகுப்பறைகள், அதே பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ.66.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவா் பிளாக் மற்றும் கூடுதல் வகுப்பறைகள், 24-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கொடிசியா சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாக மையம், 22-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சேரன் மாநகா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில்

ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை, 6-ஆவது வாா்டுக்கு உள்பட்ட நேரு நகா் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், 23-ஆவது வாா்டு, மதுசூதனன் நகரில் ரூ.20.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொறியாளா், சுகாதார மேற்பாா்வையாளா் மற்றும் வரி வசூல் மையம் என மொத்தம் ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் 7 வளா்ச்சித் திட்டப் பணிகளை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

Advertisement

முன்னதாக, கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களுக்கு உள்பட்ட வாா்டு பகுதிகளில், ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணிகளை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வுகளில், மேயா் கா.ரங்கநாயகி, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மாநகர தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், மாநகர நல அலுவலா் மோகன், மண்டலத் தலைவா்கள் இலக்குமி இளஞ்செல்வி, வே.கதிா்வேல், உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ், உதவி செயற்பொறியாளா்கள் சத்தியமூா்த்தி, கல்யாணசுந்தரம், 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.