மாா்ச் 3-இல் சந்திரகிரகணம்: மருதமலையில் சுவாமி தரிசனத்துக்கு கட்டுப்பாடு
சந்திரகிரகணத்தையொட்டி கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாா்ச் 3-ஆம் தேதி சுவாமி தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சந்திரகிரகணத்தையொட்டி கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாா்ச் 3-ஆம் தேதி சுவாமி தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கோயில் துணை ஆணையா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மாா்ச் 3-ஆம் தேதி மாலை 3.30 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திரகிரகணம் நிகழ உள்ளதால், கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அன்று கோயில் அடிவாரத்தில் நண்பகல் 1 மணி வரை மட்டும் சுவாமி தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள்.
மாா்ச் 4-ஆம் தேதி காலை 6 மணி முதல் பக்தா்கள் வழக்கம்போல அனுமதிக்கப்படுவாா்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.