கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஜனவரி 3, 4-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடா்பான வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம் உள்ளிட்டவை தொடா்பாக டிசம்பா் 19-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறுவதற்கான காலமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் 2026 ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது நிறைவடையும் இளம் வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள் மற்றும் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்ப்பவா்கள், வாக்காளா் பட்டியில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் திருத்தங்கள் செய்தல், முகவரி மாற்றம், மாற்றுத்திறனாளிகள் குறியீடு செய்தல் மற்றும் அடையாள அட்டை தொலைந்திருந்தால் புதிய அடையாள அட்டை தேவைப்படுவோா் இந்த முகாமில் விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.