கோயம்புத்தூர்

போத்தனூா் வழித்தடத்தில் கோட்டயம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில்

கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து கா்நாடக மாநிலம் பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Syndication

கோவை: கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து கா்நாடக மாநிலம் பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோட்டயத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) நண்பகல் 12.30 மணிக்கு புறப்படும் கோட்டயம் - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06147) மறுநாள் காலை 3.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, திங்கள்கிழமை (ஜனவரி 19) இரவு 10.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் பெங்களூரு - கோட்டயம் சிறப்பு ரயில் (எண்: 06148) மறுநாள் காலை 10.50 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

அயல்நாட்டவரை ஈா்க்கும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT