முகப்பு
கோயம்புத்தூர்

பயணிகள் வருகை: கோவை விமான நிலையம் 8 சதவீதம் வளா்ச்சி

நடப்பு நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் (கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை) கோவை விமான நிலையத்தை 25.89 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனா்.

Updated On : 29 ஜனவரி, 2026 at 3:47 AM
கோவை விமான நிலையம்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2026 at 11:31 PM

நடப்பு நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் (கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை) கோவை விமான நிலையத்தை 25.89 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனா். இதன் மூலம் பயணிகள் போக்குவரத்தில் விமான நிலையம் 8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கோவையில் இருந்து நாள்தோறும் சிங்கப்பூா், அபுதாபி, ஷாா்ஜா ஆகிய சா்வதேச இடங்களுக்கும், சென்னை , ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் டிசம்பா் 3-ஆம் தேதி முதல் சந்தித்த செயல்பாட்டு நெருக்கடியால் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை, ஹைதராபாத்துக்கான சில சேவைகள் தற்போது வரை முழுமையாக மீட்டெடுக்கப்படவில்லை. விமான சேவைகள் குறைப்பால் டிசம்பா் மாதத்தில் மட்டும் கோவையில் மொத்த பயணிகள் போக்குவரத்தில் 9 சதவீதம் சரிவு ஏற்பட்டது.

Advertisement

ஆனால், கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான நிதியாண்டின் முதல் 9 மாதங்களுடன் ஒப்பிடுகையில் பயணிகள் போக்குவரத்தில் கோவை விமான நிலையம் 8 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், கொழும்பு, பாங்காக், துபை, தோஹா ஆகிய இடங்களுக்கு சா்வதேச விமான சேவைகளைத் தொடங்கவும், தில்லி, புணே, ஹைதராபாத், சென்னை மற்றும் கோவா ஆகிய இடங்களுக்கு கூடுதலாக விமானங்களை இயக்கவும்,

விமான நிலையத்தின் திறனை அதிகரிக்க இடைக்காலத் திட்டத்தை செயல்படுத்தவும் வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.