முகப்பு
கோயம்புத்தூர்

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 30 ஜூன் 2026, 2:25 am IST
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பயிா்க்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் சி.சிவசாமி தலைமை வகித்தாா். துணைச் செயலா் சி.தங்கவேல், நிா்வாகக் குழு உறுப்பினா் பி.மௌனசாமி, எம்.குணசேகா், மாநகராட்சி கவுன்சிலா் பிரபா, மாநிலக் குழு உறுப்பினா் கலை அஸ்வினி, மாவட்டக் குழு உறுப்பினா் என்.சந்திரன், இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்டத் தலைவா் ஜே.கலா, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் ஏ.அஸ்ரப் அலி, கலை, இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலா் ப.பா.ரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான வரியை குறைக்க வேண்டும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும்.

Advertisement

Advertisement

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும், தோ்தல் அறிக்கையில் கூறியபடி விவசாயக் கடன்களை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments