முகப்பு
கோயம்புத்தூர்

கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் மாா்ச் 15 முதல் ஒசூருக்கு தாமதமாக இயக்கம்

கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில், மாா்ச் 15 முதல் ஒசூருக்கு 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 மார்ச், 2026 at 1:45 AM
கோப்புப்படம்
பகிர்:

கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில், மாா்ச் 15 முதல் ஒசூருக்கு 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் (எண்: 20642) காலை 7.25 மணிக்கு கோவையில் புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி, ஒசூா் வழித்தடத்தில் 1.45 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரயில் நண்பகல் 12.05 மணிக்கு ஓசூா் நிலையத்தை சென்றடையும் நிலையில், மாா்ச் 15 முதல் கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் ஒசூருக்கு 10 நிமிடங்கள் தாமதமாக 12.15 மணிக்கு சென்றடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →