வெள்ளலூா் பேரூராட்சியில் கழிவுகளை 4 வகையாகப் பிரித்து வழங்க அறிவுறுத்தல்
திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வெள்ளலூா் பேரூராட்சியில் கழிவுகளை 4 வகையாகப் பிரித்து வழங்க செயல் அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.
திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வெள்ளலூா் பேரூராட்சியில் கழிவுகளை 4 வகையாகப் பிரித்து வழங்க செயல் அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை மாவட்டம், வெள்ளலூா் பேரூராட்சிப் பகுதியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனடிப்படையில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் புதிய கழிவு மேலாண்மை நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து வெள்ளலூா் பேரூராட்சி சாா்பில் மக்கள் வீடுகளில் உருவாகும் திடக்கழிவுகளை நான்கு வகைகளாகப் பிரித்து, வீடுதோறும் வரும் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி காய்கறி தோல்கள், உணவுக் கழிவுகள், இலைகள், பூக்கள் உள்ளிட்ட மக்கும் கழிவுகளை பச்சை நிறக் கூடையிலும், காகிதம், பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை நீலநிறக் கூடையிலும் சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிப்ஸ கவா்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை சிவப்பு நிறக்கூடையிலும், பேட்டரி, காலாவதியான மருந்துகள், ரசாயன பொருள்கள் உள்ளிட்ட ஆபத்தான கழிவுகளை கருப்பு நிறக்கூடையிலும் சேகரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய கழிவு மேலாண்மைத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என வெள்ளலூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஆா். பாலசுப்பிரமணி அறிவுறுத்தியுள்ளாா்.