ஈரோடு

குடிநீர் கோரி சாலை மறியல்

DIN

தொட்டம்பாளையம் பகுதியில் குடிநீர் கோரி பொதுமக்கள் காலிக் குடங்ளுடன் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
 பவானிசாகர் ஒன்றியம், தொப்பம்பாளையம் ஊராட்சியில் உள்ள தொட்டம்பாளையம் பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீர் பவானிசாகரில் செயல்படும் தொட்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இங்கு தேவாங்கபுரம், ராஜீவ்நகர், அண்ணாநகர் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் தினசரி குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை என புகார் கூறப்பட்டது.  
 இந்நிலையில், கடந்த 7 நாள்களாக அண்ணா நகர், காலனி ஆகிய பகுதிகளுக்கு போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அண்ணா
நகர் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் சத்தி - பவானிசாகர் பைபாஸ் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
 இதுகுறித்து தகவலறிந்த போலீஸாரும்,  உள்ளூர் அதிமுக பிரமுகர்களும் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, குடிநீர் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இரண்டொரு நாள்களில் குடிநீர் விநியோகம் சீராகும் எனவும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியலை பொதுமக்க் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT