ஈரோடு

குழுவாக இயங்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கரூர் வைஸ்யா வங்கி நிர்வாக இயக்குநர்

DIN

குழுவாக இயங்கும் மனப்பான்மையை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கரூர்      வைஸ்யா வங்கி நிர்வாக இயக்குநர் கே.வெங்கட்ரமணன் கூறினார்.
 ஈரோடு அருகே பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற 29-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:
 கடந்த 4 தலைமுறை காலகட்டத்தில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக முதலீடுகளுக்கு இந்தியா திறக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலைவாய்ப்பு  நல்ல நிலையில் உள்ளது. உயர் கல்வி பெற விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு வங்கிகள் தாராளமாக கல்விக் கடனை வழங்கி வருகின்றன.
 நேர்மை,  நம்பிக்கை,  உண்மைத் தன்மை,  கடின உழைப்பு,  முதியோர்களை மதிக்கும் குணம்,  இறைநம்பிக்கை ஆகிய குணநலன்கள் இருந்தால் சிறந்த மனிதனாக வாழலாம். கார்பரேட் கலாசாரம் வந்துவிட்டதால் தொழில், வேலை எதுவாக இருந்தாலும் குழுவாகத்தான் இயங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, குழுவாக இயங்கும் மனப்பான்மையை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, 1,815 மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.   
 விழாவில், கல்லூரித் தாளாளர் ஏ.வெங்கடாசலம்,  முதல்வர் எஸ்.குப்புசாமி,  பாரம்பரிய அறங்காவலர்கள் தங்கவேலு கவுண்டர்,  ஏ.கே.இளங்கோ, பி.டி.தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT