ஈரோடு

காங்கயம் இன மாடுகள் ஆராய்ச்சி மையத்தை மொடக்குறிச்சி தொகுதியில் அமைக்க கோரிக்கை

DIN

காங்கயம் இன மாடுகள் ஆராய்ச்சி மையத்தை மொடக்குறிச்சி தொகுதியில் அமைக்க வேண்டும் என்று  தமிழ்நாடு மாநில சிறு, குறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மொடக்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஆர். சுதந்திரராசு தலைமை வகித்தார். செயலாளர் கே.சி.சுப்பிரமணி வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  
காங்கயம் இன மாடுகள் குறித்து ஈரோடு மாவட்டத்தில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதுடன்,  இந்த ஆராய்ச்சி மையத்தை மொடக்குறிச்சி தொகுதியில் அமைக்க வேண்டும்.  ஆவின் மூலம் நாட்டு மாட்டின் பாலை தனியாக கொள்முதல் செய்து அதிகபட்ச விலை வழங்கவேண்டும். கரும்புக்கு அரசு அறிவித்த விலையை தனியார் சர்க்கரை ஆலைகள்,  உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

SCROLL FOR NEXT