ஈரோடு

உண்டு உறைவிடப் பள்ளி நடத்த விரும்புவோர் ஜூன் 27-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளி நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, அந்தியூர், சத்தி, நம்பியூர், தாளவாடி, டிஎன் பாளையம் ஆகிய 6 ஒன்றியங்களில் கேஜிபிவி பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், நம்பியூர் ஒன்றியத்தில் சொக்குமாரிபாளையம், சத்தி ஒன்றியத்தில் வேடர்கரில் உள்ள 2 கேஜிபிவி பள்ளிகளுக்கும் 2017-18 ஆம் ஆண்டுக்கு புதிய அரசு சாரா தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்தப் பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளிகளை நடத்த விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள், ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் அனைவருக்கும் கல்வி இயக்கக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தை அணுகலாம்.
இதற்கான விண்ணப்பங்களை ஜூன் 20-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 27-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT