ஈரோடு

சென்னிமலை தன்னாசியப்பன் கோயிலில் மாசி திருவிழா

சென்னிமலை முருகன் கோயில் பின்புறம் உள்ள தன்னாசியப்பன் கோயிலில் 12-ஆம் ஆண்டு மாசி திருவிழா, பெளர்ணமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

சென்னிமலை முருகன் கோயில் பின்புறம் உள்ள தன்னாசியப்பன் கோயிலில் 12-ஆம் ஆண்டு மாசி திருவிழா, பெளர்ணமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 காலை 8 மணிக்கு, தீர்த்தம் கொண்டு வருவதற்காக பக்தர்கள் மடவிளாகம் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர், மலை அடிவாரத்தில் உள்ள செங்கத்துரை பூசாரி மடத்தில் தீர்த்தக் குடங்களுக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது.
 காலை 9 மணிக்குமேல் பக்தர்கள் தீர்த்தக் குடங்களுடன் புறப்பட்டு, மலைமேல் உள்ள முருகன் கோயிலை அடைந்தனர். அங்கு, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, முருகன் சன்னதி பின்புறம் உள்ள வள்ளி - தெய்வானை கோயிலுக்குச் சென்றனர். அங்கு அமிர்தவல்லி, சுந்தரவல்லி ஆகியோருக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தன்னாசியப்பன் கோயிலுக்கு தீர்த்தக் குடங்களுடன் சென்றனர். அங்கு யாக சாலை அமைக்கப்பட்டு மழை வேண்டியும், உலக அமைதிக்காகவும் யாக பூஜைகள் நடைபெற்றன. பிறகு, பின்னாக்கு சித்தர், சரவணமாமுனிவர், தன்னாசியப்பர் சித்தர் சுவாமிகளுக்கு தீர்த்த அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யன் தன்னாசியப்பன் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT