முகப்பு
ஈரோடு

கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரிக்கும்,  யமாஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பயிற்சி மையத்துக்கும் இடையே

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரிக்கும்,  யமாஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பயிற்சி மையத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில், கல்லூரித் தாளாளர் கே.சி.முத்துசாமி, யமாஹா மோட்டார்ஸ்  நிறுவன துணைத் தலைவர் ரவீந்தர் சிங் ஆகியோர் இடையே ஒப்பந்தப் பரிமாற்றம் செய்துக்கொள்ளப்பட்டது.  பல்லகவுண்டன்பாளையம் சக்தி ஆட்டோகாம்பனென்ட் துணைத் தலைவர் சக்கரையப்பன், கல்லூரி முதல்வர் என்.விஸ்வநாதன், இயந்திரவியல் துறைத் தலைவர் கோகுலகிருஷ்ணன், மின்னியல் துறைத் தலைவர் தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →