முகப்பு
ஈரோடு

வாகனம் மோதி புள்ளிமான் சாவு

சத்தியமங்கலம் அருகே வாகனம் மோதியதில் 4 வயதுள்ள பெண் புள்ளிமான் உயிரிழந்தது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சத்தியமங்கலம் அருகே வாகனம் மோதியதில் 4 வயதுள்ள பெண் புள்ளிமான் உயிரிழந்தது.
 சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம் வனப் பகுதியில் இருந்து வந்த 6 வயதுள்ள பெண் புள்ளிமான் சிக்கரசம்பாளையம் பெட்ரோல் பங்க் மைசூரு சாலையைக் கடக்க முயன்றது. அப்போது, அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அந்த மான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மானுக்குத் தண்ணீர் கொடுத்து உதவினர்.
 இதுகுறித்து, சத்தியமங்கலம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினர் மயக்க நிலையில் இருந்த மானை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால், அந்த மான் உயிரிழந்தது.
 கால்நடை மருத்துவர் அசோகன் முன்னிலையில், மானின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பண்ணாரி வனத்தில் புதைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →