முகப்பு
ஈரோடு

அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: விதிமுறைகள் அறிவிப்பு

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிக்குப் பின்வரும் தகுதிகள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிக்குப் பின்வரும் தகுதிகள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
 உழைக்கும் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 50 சதவீத மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் நடப்பு ஆண்டு (2017-18) முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் முற்றிலும் மகளிருக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் ஊரகம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளை சார்ந்த உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க (120 சிசி சக்திக்கு மிகாமல் உள்ள இருசக்கர வாகனம்) மானியத் தொகை ரூ. 25 ஆயிரம்  
அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை அரசால் வழங்கப்படும்.
 தகுதியுடைய பெண்கள் இத்திட்டத்தின்கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம்:
 தமிழகத்தை சார்ந்தவராகவும், தமிழகத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், தேர்ச்சி பெறாதவர். 18 - 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது எல்.எல்.ஆர். அல்லது ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் போதுமானது.  ஆனால், அரசு மானியம் பெற விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் உரிமம்  கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 
 விண்ணப்பங்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி , ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், h‌t‌t‌p://‌t​a‌m‌i‌l‌n​a‌d‌u‌m​a‌h​a‌l‌i‌r.‌o‌r‌g என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 விண்ணப்பிக்கும் நபரின்ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பயனாளி, அமைப்புசார், அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரிவபராக, சிறு தொழில் செய்பவராக இருத்தல் வேண்டும். தொலைதூரம், மலைப் பகுதிகளில் வசிப்பவர்கள், 
பெண்களைக் குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள், 35 வயதைக் கடந்த திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், திருநங்கைகள் ஆகியோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். 1.1.2018-க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். விண்ணப்பதாரர் பெயரில் ஏற்கெனவே வாகனம் ஏதும் இருக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →