ஈரோடு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு சார்பில் இலவசப் பயிற்சி

DIN

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து, தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற 18 முதல் 35 வயதுடைய இளைஞர்களுக்காக இலவச குறுகிய கால தொழில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. 
 5-ஆம் வகுப்பு தேறியவர்களுக்கு 3 மாத காலம் தையல் பயிற்சி, 8-ஆம் வகுப்பு தேறியவர்களுக்கு 5 மாத ஆட்டோமோட்டிவ் சர்வீஸ் பயிற்சி, 10-ஆம் வகுப்புத் தேறியவர்களுக்கு 3 மாத எலக்ட்ரீசியன் உதவியாளர் பயிற்சி ஆகியன வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.  இப்பயிற்சி பெறுபவர்களுக்கு இலவச பேருந்து வசதியுடன் நாளொன்றுக்கு ரூ. 100 வீதம் பயிற்சி காலம் முழுவதும் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சியில் தேர்வு பெறும் பயிற்சியாளர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் எண் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளப்படும்.
 பயிற்சியின் முடிவில் பொது, தனியார் நிறுவனங்களில் ரூ. 8,000 முதல் ரூ. 12,000 வரையிலான சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத் 
தர வழிவகை செய்யப்படும். பயிற்சி பெற்றவர்களின் பதிவு எண், விவரங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளப்படும். மேலும், அரசு, பொது நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இப்பயிற்சியாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
 பயிற்சி பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 24-ஆம் தேதி. விண்ணப்பங்களை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், பயிற்சி குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள கல்லூரி முதல்வர், பயிற்சி ஒருங்கிணைப்பாளரை 04294 - 220471, 98427-84740, 86752-22955 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT