பெருந்துறையில் ரூ. 1.60 கோடிக்கு கொப்பரை ஏலம்
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.60 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.60 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை, அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 3, 071 மூட்டைகளில், 1,30, 000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.130. 05-க்கும், அதிகபட்சமாக ரூ.140-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 78. 80-க்கும், அதிகபட்சமாக ரூ. 129.10-க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 1. 60 கோடிக்கு ஏலம் மூலமாக விற்பனையானது என சங்கத் தலைவர் அருள்ஜோதிசெல்வராஜ் தெரிவித்தார்.