ஈரோடு

இளைஞர்களுக்கு இலவச ஆடு வளர்ப்புப் பயிற்சி

DIN

ஈரோடு கனரா வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் கிராமப்புற இளைஞர், இளம்பெண்கள், விவசாயிகளுக்கு ஆடு வளர்க்கும் தொழில்நுட்பம் குறித்த 10 நாள் இலவசப் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் கே.சுதர்சன் வெளியிட்ட தகவல்: 
 கிராமப்புறத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இருபால் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து அவர்கள் சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் இலவச மதிய உணவு, தரமான குறிப்பேடுகளுடன் பல்வேறு தொழில் பயற்சிகளை அளித்து அவர்களது எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது இலவச ஆடு வளர்க்கும் தொழில்நுட்பங்கள் குறித்து (ஜனவரி 18 முதல் 30 வரை) 10 நாள்கள் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
 இதில், சேர விரும்பும்  கிராமப்புற இளைஞர்கள், மகளிர் குழுவினர், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. வயது வரம்பு இல்லை. ஈரோடு கரூர் பைபாஸ் சாலை, கொல்லம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தினமும் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பயிற்சி  வகுப்புகள் நடைபெறுகின்றன.
 மேலும், விவரங்களுக்குப் பயிற்சி நிலையத்தை 0424-2400338 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT