ஈரோடு

கோபியில் நாளை தேரோட்டம்

DIN

கோபியில் அமைந்துள்ள விஸ்வேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை (மே 28) தேரோட்டம் நடைபெறவுள்ளது.
கோபி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோயிலில் தேர்த் திருவிழா பிரம்மோற்சவ விழாவாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா மே 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பூதவாகனம், சிம்ம வாகனம் , நந்தி வாகனம், சேஷவாகனம் பஞ்சமூர்த்தி உற்சவம், ரிஷப வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா ந டைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (மே 27) மாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு யானை மற்றும் அன்ன வாகனக் காட்சியும் நடைபெறவுள்ளது.
விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக திங்கள்கிழமை (மே 28) அதிகாலை மஹா அபிஷேகம் தொடர்ந்து சுவாமி தேருக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தல் நிகழ்ச்சியும் தொடர்ந்து வண்டித்திரை உற்சவம், அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெறும்.
மே 29 ஆம் தேதி இரவு பாரி வேட்டை, குதிரை, கிளி வாகனக் காட்சியும், மே30ஆம் தேதி காலை ஸ்ரீ பிஷாண்டவர் உற்சவமும், அபிஷேகமும், மாலை தெப்போத்ஸவமும் நடைபெறவுள்ளது.
மே31ஆம் தேதி காலை நடராஜர் அபிஷேகம், தீபாரதனை, இரவு அவரோஹணம், புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவுலாக் காட்சியும், ஜூன் 1ஆம் தேதி காலை மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர், நிர்வாகக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT