ஈரோடு

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்

DIN

பவானியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வட்டார வள மையம் சார்பில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு பரிசோதனை, அடையாள அட்டை வழங்குதல், உதவி உபகரணங்கள் ஆகியன வழங்கப்பட்டது. கண், காது, மூக்கு, தொண்டை  மருத்துவர், எலும்பு முறிவு, மன நல மருத்துவர், காது, கண் பரிசோதகர் ஆகியோர் குழந்தைகளுக்குப் பரிசோதனை மேற்கொண்டனர். பவானி சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் குழந்தைகள் கலந்துகொண்டனர்.
இதில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் எஸ்.செளந்திராள், ஒருங்கிணைப்பாளர் என்.முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாபு, இயன்முறை மருத்துவர்கள் பி.விஜய், எஸ்.சரண்யா, வி.வினோதினி, எஸ்.பவித்ரா, சிறப்பு பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT