ஈரோடு

சாலை விபத்தில் இருவர் சாவு

DIN

கோபி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
கோபியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் (55), பாலு (50). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் எலத்தூர், செட்டிபாளையத்தில் இருந்து நம்பியூருக்கு வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ஐயப்பன், பாலு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கடத்தூர் போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT