ஈரோடு

வாழையில் நூற்புழுவை கட்டுப்படுத்த செயல்விளக்கம்

DIN

வாழையில் நூற்புழுவை கட்டுப்படுத்துதல் குறித்து வேளாண்மை துறை செயல் விளக்கம் அளித்துள்ளது.
பவானிசாகரில் கிராமத் தங்கல் திட்டத்துக்காக தங்கி உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள்  அய்யன்சாலை கிராமத்தில் வாழையில் நூற்புழுவை கட்டுப்படுத்த மேல் தோல் நீக்கி செப்பனிடுதல் முறை குறித்து செயல் விளக்கம் செய்தனர்.  இந்நிகழ்ச்சியில் அந்தக் கிராமத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெற்றனர். 
மேலும்,  நெற்பயிரில் எப்படி விதை நேர்த்தி செய்வது  என்பது குறித்தும் மாணவர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இது தங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்ததாக விவசாயிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT