முகப்பு
ஈரோடு

பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தல்

பவானியை அடுத்த பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை  நடைபெற்றது. 

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:13 AM
பகிர்:

பவானியை அடுத்த பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை  நடைபெற்றது. 
இச்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் 11 பேருக்கு, 33 பேர் போட்டியிட்டனர். கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஏற்பட்ட தகராறால் ரத்து செய்யப்பட்டு, மறு தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் அலுவலர் ஜான் டேவிட் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 
 இதில், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எஸ்.கவிதா, எம்.கவிதா, எஸ்.லட்சுமி, கே.அமுதவள்ளி, ஆர்.குமார், எஸ்.பரணீதரன், எஸ்.அர்ச்சுணன், பி.முத்துசாமி, கே.காந்தி, கே.பழனிசாமி, எம்.பெருமாள் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நிர்வாகக் குழு உறுப்பினராக தேர்வான எஸ்.பரணீதரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலராக உள்ளார். பவானி டிஎஸ்பி சார்லஸ் தலைமையில் ஆய்வாளர்கள் ரவி, குமரவேல், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.