ஈரோடு

பவானி நகராட்சியில் 588 பேருக்கு வீடுகள் கட்ட உத்தரவு

DIN

பவானி நகராட்சிப் பகுதியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், 588 பேருக்கு தலா ரூ. 2.10 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டும் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. 
பவானி நகராட்சிப் பகுதியில் 27 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியான பயனாளிகள் 588 பேருக்கு உத்தரவுகள் வழங்கும் நிகழ்ச்சி, நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையர் கே.கதிர்வேல் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பயனாளிகளுக்கு வீடு கட்டும் உத்தரவுகளை வழங்கினார். முதல்கட்டமாக 550 பேருக்கும், இரண்டாம் கட்டமாக 38 பேருக்கும் உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இதில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.ஆர்.துரை, முன்னாள் துணைத் தலைவர்கள் என்.கிருஷ்ணராஜ், என்.ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் எஸ்.எஸ்.சித்தையன், கே.கே.விஸ்வநாதன், எஸ்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT