ஈரோடு

பவானி அருகே பிரமாண்ட குடிநீர்க் குழாய் உடைந்து வெளியேறிய தண்ணீரால் பொதுமக்கள் பாதிப்பு

DIN

பவானி அருகே பிரமாண்ட குடிநீர் குழாய் உடைந்து வெளியேறிய தண்ணீரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பவானி அருகே உள்ள வரதநல்லூர் பகுதியிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் எடுக்கப்பட்டு, ஈரோடு மாநகராட்சிப் பகுதிக்குக் குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டம் ரூ.380 கோடியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்காக, நிமிடத்துக்கு 90 ஆயிரம் லிட்டர் தண்ணீர் செல்லும் வகையில் பிரமாண்ட குடிநீர் குழாய்கள், சாலையோரத்தில் சுமார் 15 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ளன.  
 இக்குடிநீர் குழாயில் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பி, பவானி பகுதியில் 5 கி.மீ. தொலைவுக்கு அழுத்தப் பரிசோதனை செய்யப்பட்டபோது, குருப்பநாயக்கன்பாளையத்தை அடுத்த ஓபுளி நூற்பாலை அருகே வால்வு உடைந்து திங்கள்கிழமை தண்ணீர் வெளியேறியது. இதனால், சாலையோர பள்ளங்களை மூடியபடி பெருக்கெடுத்த தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளையும் சூழ்ந்தது. 
 இதனால், பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. குழாயிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையில் தண்ணீர் வெளியேறியபடியே இருந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இப்பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் சீரமைப்புப் பணிக்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 
 தற்போது தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டிருந்தாலும் இரு நாள்களாக குழாய் புதைக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீரால் புதைகுழியாக மாறியுள்ளது. குழாய் பதிக்க காட்டும் ஆர்வத்தை, இப்பணியால் பாதிப்புகள் ஏற்படும்போது அதனைச் சீரமைக்கவும் காட்ட வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT