ஈரோடு

அடிப்படை வசதிகள்கோரி  வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்

DIN

ஈரோடு, ஆர்.என்.புதூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சி ஆர்.என்.புதூர், சொட்டையம்பாளையம், வயக்காட்டுப்பாறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா வழங்க கோரியும், குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.  
அண்மையில் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து வாக்காளர் அடையாள அட்டைகளை கோரிக்கை மனுவுடன் சேர்த்து அங்குள்ள புகார் பெட்டியில் போட்டனர். அப்போது அவர்கள் வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தனர். 
இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர். மேலும், அந்தப் பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முகத்தில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும், கருப்புக் கொடியை கையில் ஏந்திய படியும் முழக்கம் எழுப்பினர். 
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டலம் 4ஆவது வார்டுக்கு உள்பட்ட எங்களது பகுதியில் சுமார் 60 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். பல முறை ஈரோடு மாவட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.  இதற்காக எங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டோம். மேலும் எங்களது வாக்கு உரிமையை ரத்து செய்துவிடும்படியும் மனு கொடுத்து இருக்கிறோம்.
 குடிநீர் வசதி கூட இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். தண்ணீர் பிடிக்க 2 கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதேபோல் சாலை வசதியும் இல்லை. எனவே எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT