ஈரோடு

குடிநீர் வழங்கக் கோரி  பொதுமக்கள் மறியல் போராட்டம்

DIN

பவானி அருகே குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
அம்மாபேட்டை அருகேயுள்ள குதிரைக்கல்மேடு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தண்ணீர் தேவைக்கு கடும் சிரமப்பட்டு வந்தனர். 
இதுகுறித்து, அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பவானி - மேட்டூர் சாலையில் குதிரைக்கல்மேடு பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அம்மாபேட்டை போலீஸார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 
சீரமைப்புப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT