ஈரோடு

ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்த எலக்ட்ரானிக்ஸ் முகவர்கள் கோரிக்கை

DIN

வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எலக்ட்ரானிக்ஸ் முகவர்கள் கோரிக்கை விடுத்தனர். 
 ஈரோடு மாவட்ட எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளையன்சஸ் முகவர்கள் சங்கக் கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் என்.நடராஜன் தலைமை வகித்து பேசினார். செயலாளர் ஆர்.ஸ்ரீராஜேஷ், பொருளாளர் எம்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  ஈரோடு மாவட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் தொழிலை நம்பி மறைமுகமாவும், நேரடியாகவும் சுமார் 10,000  தொழிலாளர்கள் உள்ளனர். ஆன்லைன் வர்த்தகம் மூலம் இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
  இதில் சங்கத்தின் துணைத்தலைவர் குருநாதன், இணைச்செயலார்கள் விஜய்ஆனந்த், செந்தில்குமார், உயர்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் லோகநாதன், பொன்நாராயணன், பழனிசாமி, வெங்கடாசலம், செளந்தராஜன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT