ஈரோடு

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை: போலீஸார் தொடர் சோதனை, 80 பேரிடம் விசாரணை

DIN

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் போலீஸார் சோதனை நடத்தி  80 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். 
தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத் துறை தெரிவித்த தகவலை அடுத்து மாவட்டம் முழுவதும் போலீஸார்  உஷார்படுத்தப்பட்டு போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள 13 சோதனைச் சாவடியில் போலீஸார் வியாழக்கிழமை இரவில் இருந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும், மாவட்டம் முழுவதும் விடுதி, பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சந்தேகப்படும்படியான நபர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு அவர்கள் கைரேகைகளைப் பதிவு செய்தனர். 
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை இரவு முதல் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே ஈரோடு நகருக்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது. சோதனையில் 80 பேரிடம் விசாரணை நடத்தி கை ரேகைகளைப் பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து, சோதனை நடைபெற்று வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT